சீக்கிரம் லட்சாதிபதியாகலாம்’ சாட்ஜிபிடி கொடுக்கும் ரூ.16 லட்சம் Tamil Tech News
சாட்ஜிபிடி அமெரிக்காவின் ஓபன் ஏஐ நிறுவனம் அறிமுகப்படுத்திய சாட்ஜிபிடி இணைய உலகை ஆக்கிரமித்துள்ளது. எந்த வேலையை எடுத்தாலும் கண்ணிமைக்கும் நேரத்தில் முடித்துக் கொடுக்கும் சாட்ஜிபிடி மூலம் பல வழிகளில் சம்பாதிக்கலாம். இந்த தொழில்நுட்பத்தை ஸ்மார்ட்டாக பயன்படுத்தினால் வெப்சைட் வைத்திருப்பவர்கள், யூடியூப் சேனல் வைத்திருப்பவர்கள் எல்லாம் கோடிகளில் வெகு சீக்கிரமே புரண்டுவிட முடியும். ஆனால் அதற்கு உங்களின் முயற்சி அவசியம். இது ஒருபுறம் இருக்க, சாட்ஜிபிடி நிறுவனமே இப்போது பணப் பரிசை அறிவித்துள்ளது. சும்மா... ஆயிரம்.... 10 ஆயிரம் ரூபாய் பரிசு எல்லாம் அல்ல அது. Tamil Tech News ஓபன்ஏஐ வெகுமதி 16 லட்சம் ரூபாயை கொத்தாக கொடுக்கிறது. இதற்கு நீங்கள் கொஞ்சம் மூளையை கசக்கிப் பிழிய வேண்டும். டெக் துறையில் உங்களுக்கு அனுபவம் இருந்தால், இந்த பரிசு நிச்சயம் உங்களுக்கு கிடைக்கும் வாய்ப்பு பிரகாசம் எனலாம். சாட்ஜிபிடிக்கு சொந்தமான OpenAI நிறுவனம் இப்போது Bug Bounty என்ற புதிய திட்டத்தை தொடங்கியிருக்கிறது. கடந்த செவ்வாய்க்கிழமை முதல் நடைமுறைக்கு வந்திருக்கும் இந்த திட்டத்தில், சாட்ஜிபிடியில் இருக்கும் ...